மொழிபெயர்ப்பிற்காக எங்களிடம் வழங்கப்படும் உங்களுடைய கோப்புகள் ((MCA)மியூட்சியுவல் கான்ஃபிடன்சியல் ஆஃக்டின் ) அடிப்படையில் நிறுவனத்தால் பாதுகாக்கப்படும்
மொழிபெயர்க்கவேண்டிய உங்களுடைய ஆவணத்தின் அசல் நகலை PDF ஆகவோ அல்லது தெளிவான (Picture)புகைப்படமாகவோ எங்களுடைய நிறுவன மின்னஞ்சலான (help@smileytranslationservice.com) என்ற மின்னஞ்சலிற்கோ அல்லது(விரைவு நடவடிக்கைக்கு தோதுவாக) எங்கள் நிறுவன தலைமை அதிகாரியின் தனிப்பட்ட மின்னஞ்சலிற்கோ அல்லது அவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்பப்பட வேண்டும்.
உங்களுடைய அசல் கோப்பில் எவையெல்லாம் கட்டாயம் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை என்பதை எங்கள் நிறுவன அதிகாரி கண்டறிந்து அவற்றிற்கான மொழிபெயர்ப்பு கட்டணத்தையும் மேலும் அவை மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும் நேரத்தையும் தெரிவிப்பார்.(10 பக்கங்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படலாம்.)
உங்களுடைய ஆவண மொழிபெயர்ப்பை உறுதிசெய்வதற்காக உங்கள் கட்டணத்தொகையில் ஒரு பகுதியை எங்களுடைய நிறுவன உரிமையாளரின் வங்கிக்கணக்கிற்கோ அல்லது இணையவழி மூலமாகவோ கட்டாயம் செலுத்த வேண்டும்.அப்படி முன்தொகை செலுத்தப்பட்ட பிறகே உங்கள் கோப்பு மொழிபெயர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்படும்.மேலும் உங்கள் முன்பணம் செலுத்தப்பட்டதை எங்கள் நிறுவன அதிகாரிக்கு கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும்.
உங்கள் ஆவணம் மொழிபெயர்க்கப்படுவதற்கான காரணம் அல்லது அவற்றில் உள்ள பெயர்களை சரியாக குறிப்பிடுவதற்கு உதவும் ஆவணங்கள் எதையேனும் எங்கள் நிறுவன அதிகாரி கேட்டால் கட்டாயம் அவை வழங்கப்பட வேண்டும்.
உங்கள் மொழிபெயர்ப்பு ஆவணம் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டால் உரித்த நேரத்திற்குள் எங்கள் நிறுவன அதிகாரி கட்டாயம் உங்களை தொடர்புகொள்வார்.மேலும் உங்களுடைய மொழிபெயர்க்கப்பட்ட ஆவணத்தின் சில பக்கங்களை படம்பிடித்து உங்களுக்கு அனுப்புவார்.அதனை நீங்கள் உறுதி செய்தபின்பு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் மேலும் மொழிபெயர்ப்பிற்கான மீதி தொகையையும் செலுத்த வேண்டும்.மேலும் செலுத்தியதற்கான புகைப்படத்தையும் எங்கள் அதிகாரியிடம் பகிரலாம்.
உங்களுடைய கட்டணத்தொகை எங்கள் வங்கி கணக்கிற்கு வரவாகிவிட்டால் உங்கள் மின்னஞ்சலிற்கு ஒருசில நிமிடங்களில் உங்கள் மொழிபெயர்கப்பட்ட கோப்பு எங்களுடைய (Accuracy Certificate) தரச்சான்றிதழுடன் வழங்கப்படும்.மேலும் நீங்கள் செலுத்திய கட்டணத்தொகைக்கான ரசீதும் அவற்றோடு வழங்கப்படும்.
எங்களுடைய மொழிபெயர்ப்பு கோப்பை பெற்ற பின்பு அவற்றில் பெயர்களிலுள்ள எழுத்துக்களிலோ அல்லது ஊர்பெயர்களில் உள்ள எழுத்துக்களிலோ ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தால் அவற்றை எங்கள் நிறுவன அதிகாரிக்கு தெரியப்படுத்தலாம்.அவர் அதனை கட்டாயம் சரிசெய்து உறுதி செய்யப்பட்ட இறுதி ஆவணத்தை உங்களுக்கு அவர் வழங்குவார்.
உங்கள் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் உங்களுக்கு காகித ஆவணமாக-ஹார்ட் காப்பியாக (Hard copy) வேண்டுமானால் உங்களுடைய முழு விவரம் மற்றும் முகவரியை எங்கள் நிறுவன அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.உங்களுடைய அந்த காகித ஆவணம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான தனிக்கட்டணம் வசூலிக்கப்படும்.